அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 23 MAY 1939
இறப்பு 31 MAY 2022
திருமதி வீரகத்தி கனகம்மா
வயது 83
திருமதி வீரகத்தி கனகம்மா 1939 - 2022 நயினாதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி கனகம்மா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

எங்கள் வீட்டு குலதெய்வமே
எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு
நாட்கள் 31 ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டகலாது!

 உன் உயிரில் பாதி தந்தாய் அம்மா
நான் விடும் மூச்சிலே
உன் கருவறை வெப்பம் உணர்கின்றேன்
என் சிரிப்பினிலே
நீ பட்ட துன்பம் காண்கின்றேன்..

உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 02-07-2022 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 07:00 மணி வரை "SKAF INSTITUT இல் " நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து, அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

Address:
75 Av. Jean Jaurès
93120 La Courneuve,
France

Route:
Métro : N-7 Station : La Courneuve
Arret de Tram:1: Danton 

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலைச்செல்வி - மகள்
ஜெகா - பேரன்
குகன் - பெறாமகன்
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.