Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 MAY 1939
இறப்பு 31 MAY 2022
அமரர் வீரகத்தி கனகம்மா 1939 - 2022 நயினாதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரகத்தி கனகம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 07-06-2024

இம் மண்ணில் எம்மை
 மலரவைத்த தாயே!
ஆண்டு இரண்டு ஆனாலும் உமது
 எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!

பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே

உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது

நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!

இரண்டு ஆண்டானாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம்...

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

அம்மா என்றழைக்க
உள்ளம் துடிக்குதம்மா!

நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே நிர்மூலமானதென்ன?

ஒரு மலராய் மலர்ந்து பலர்
வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே

மண்ணோடு மறையும் காலம் வரை
எம் நெஞ்சோடு இருக்கும்
உங்கள் நினைவுகளுடனும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!


அன்னாரின் 2ம் ஆண்டு நினைஞ்சலி பிரார்த்தனை 07-06-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்திலும் அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணிமுதல் 06:00 மணிவரை Institute Skaf, 75 Av. Jean Jaurès, 93120 La Courneuve, France எனும் முகவரியில் மதிய போசனமும் நடைபெறும். அனைவரும் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

கலைச்செல்வி - மகள்
ஜெகா - பேரன்

Photos