
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து கந்தையா அவர்கள் 18-02-2023 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கராஜா, தர்மராஜா மற்றும் செல்வந்தராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிசாந்த் டமியன் அவர்களின் அன்புத் தாத்தாவும்,
நாகம்மா, காலஞ்சென்றவர்களான இலச்சம்மா, இளையபிள்ளை மற்றும் செல்லையா, காலஞ்சென்ற நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், அமிர்தலிங்கம், நல்லையா, முருகேசு மற்றும் சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் முருகன் கோவிலடியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 02:00 மணியளவில் பெரியவிளான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.