Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 24 AUG 1956
ஆண்டவன் அடியில் 14 AUG 2021
அமரர் பரதராஜா பவானந்தன் 1956 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி வடக்கு, கிளிநொச்சி உருத்திரபுரம் எட்டாம் வாய்க்கால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரதராஜா பவானந்தன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டுகள் நான்கு உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்

கல்வியைக் கருத்தாய் கற்று உயர்ந்திட
கண்டிப்புடன் நற்கல்வி அளித்தீர்கள்
கண்ணினின்று நீர் வழிந்தோடி எம்மை
கலங்க வைக்கின்றதே அப்பா

காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்

வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.

ஒம் சாந்தி! ஒம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

தகவல்: குடும்பத்தினர்