1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வட்டு வடக்கு கலைநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வாமதேவன் சுவேதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ராண்டு கடந்த பின் உம் நினைவை நாடி
ஈரவிழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் வாழ்கின்றோம்!
இளமையில் உயிர் பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!
எழுதிச்செல்லும் விதியின் கையில்
சிக்கித் தவிக்கும் மானிடர் நாம்
அழுது புலம்பித் தொழுதாலும்!
சிந்தை நொந்து புரண்டாலும்
விதியின் மதியில் மாற்றமில்லை!
நீயில்லை இங்கே நாமில்லை உன்னருகே
இதுதான் விதியா? இல்லை கடவுளின் சதியா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்