1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் விக்கினேஸ்வரன்
1945 -
2022
சுன்னாகம் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் விக்கினேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:11/06/2023
ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை அப்பா!
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்