1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் சற்குணசிங்கம்
(ராசன்)
முன்னாள் ஊழியர், காங்கேசன் சிமெந்து கூட்டுத்தாபனம்
வயது 70
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மல்லாகம் பங்களாலேனைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மயிலணியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் சற்குணசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13/10/2023.
ஆண்டு ஒன்று ஆனாலும் அழியவில்லை எம் சோகம்!
மாதங்கள் பன்னிரண்டு என்ன
யுகங்கள் பதினெட்டு ஆனாலும்
மாறாது எம் துயர் மறையாது உங்கள் நினைவு!
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எம் தந்தையே!
கண்ணில் அழுகை ஓயவில்லை எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உன்னை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!
நித்தமும் எம் நினைவில் நின்று கொண்டு
நிஜத்தில் இறைவனுடன் கலந்திட்ட உங்கள்
ஆத்மா சாந்தியடைய எம் கண்ணீரை மலர்களாக
காணிக்கையாக்கி பிரார்த்திக்கின்றோம்...!
அன்னாரின் திதி நிகழ்வுகள் வருகின்ற 13/10/2023 வெள்ளிக்கிழமை அன்று சுன்னாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்