யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Sec ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் ரவீந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
முழுமதியான முகம்படைத்தவனே
அழகான சிரிப்பழகனே
அன்பான வார்த்தைக்கு இலக்கணமானவனே
கள்ளமில்லா உள்ளம் கொண்ட
வெள்ளை மனம் படைத்தவனே
நீயோ உன் உடலை வருத்தி
வேலை செய்து
வாழ்க்கை
வாழ்வதற்காக போரடினாய்
நாங்களோ உன் உயிருக்காக போராடினோம்
பத்து நாட்களும் உன்னை
பத்து மாதம் சுமந்தவளுடன் சேர்ந்து பரிதவித்தோம்
நீ கண் விழிப்பாய் என்று
கனத்த இதயங்களுடன் காத்திருந்தோம்
நீயோ கண்களை இறுக மூடிக்கொண்டாய்
ஏன் வாழ்ந்த வாழ்க்கை பிடிக்கவில்லையா
அல்லது
வாழ்ந்தது போதும் என்று மறைந்துவிட்டாயா
உன் இரு செல்வங்களையும் ஏன் தவிக்கவிட்டாய்
பாசம் காட்ட உன்னைபோல் இங்கு யாருமில்லை
நேசம் காட்டவும் இங்கு யாருமில்லை
அன்பாக உணவளிக்க உன்னைப்போல் ஒருத்தருமில்லை
உன்னைபோல் ஒரு மனிதன் இவ்வுலகில் யாருமில்லை
இனியும் பிறப்பாரா இல்லவே இல்லை
கடைசியாக வந்துதித்தவனே
எங்கள்
கடைசி மூச்சுவரை நீ இருப்பாய் என்றிருந்தோம்
நீயோ விரைவாக ஓடி சென்றுவிட்டாய்
உன் நினைவுகளுடன் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நொடியும்
நடைபிணமாக வாழ்கின்றோம்
உன் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல கண்ணகி அம்மனை வேண்டுகின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.