Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 23 MAR 1945
இறைவன் அடியில் 29 MAR 2022
அமரர் சிவத்திரு வல்லிபுரம் குமாரசாமி ஐயா
காங்கேய வாகீசர், கலாபூஷணம், ஞானஏந்தல், வாரியார் வாரிசு, சிவானந்த வாரிதி, வண்டமிழ் வேந்தர், சைவத்தமிழ் இசை வாரிதி
வயது 77
அமரர் சிவத்திரு வல்லிபுரம் குமாரசாமி ஐயா 1945 - 2022 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி: 05-04-2024
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் வரியப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சிவத்திரு வல்லிபுரம் குமாரசாமி ஐயா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஞான விளக்காய் நல்லொளி வீசி
நம்மையெல்லாம் நல்லாளாக்கி
நல்லறிவூட்டி தந்தையாய் தாயாய்
தமையனாய் நல்லாசானாய்
குருவாய் எமக்கு வாய்த்து
குவலயம் தன்னில் எம்மை
குணமுடையவராய் வாழுவைத்த
எங்கள் குலதெய்வமே

நெற்றியில் நிறைந்த நீற்றுடன்
இசையுடன் பாவம் ஓங்கும்
இனிய சொற்பொழிவாற்றி எமது
சமய வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டதும்
அடியவர்கள் புடைசூழ பல
குருமார்கள் பதம் நாடி
ஆன்மீக வாழ்விற்கு எமக்கு வித்திட்டதும்

ஆலயங்களுக்காய் அயராது உழைத்து
அன்போடு வரும் அடியவர்களுக்கு அன்னமளித்து
அரிய நூல்கள் பல எழுதி அதனை
அன்போடு எமக்களித்ததும்

பட்டங்கள் பலபெற்றும் பாமரன் போல்
புழகும் உங்கள் பணிவான பாங்கும்
பரம்பொருளே பெரும் பொருளென
பரம பதம் நாடிய உங்கள் பணியையும்
மறக்க முடியாமல் பரிதவிக்கின்றோம்
பாசமுடன் உங்கள் உறவுகள் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 29 Mar, 2022
நன்றி நவிலல் Thu, 28 Apr, 2022