திதி:29/12/2024
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் வல்லிபுரம் கிருஷ்ணபிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை தந்தையே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து பத்து ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா!
ஆண்டவன் படைப்பினை ஆழமாய் பார்த்தாலும்
பாசமாய் உங்களின் பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின் புன்னகையை ரசிக்கின்றோம்!
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அப்பா!
காவல் தெய்வமாய் எங்களோடு என்றும்
நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
அன்புத் தந்தையே!
எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து
இன்று பத்து ஆண்டுகள்
ஆனது அப்பா..!
எத்தனை இன்னல்கள் வந்தாலும்
அப்பா நீங்கள் எம்மோடு
இருக்கின்றீர்கள் என்றெண்ணி
வாழ்ந்தோம் அப்பா..!
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே
அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள்
விதைத்து எமை விட்டு
இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!