யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வள்ளிநாயகி திருநாவுக்கரசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அம்மா! நீங்கள் எங்களைத் தவிக்கவிட்டுச் சென்று
ஓர் திங்கள் ஆனதம்மா! நம்ப மறுக்குதம்மா
எங்கள் மனம்
ஐயிரண்டு திங்கள் அங்கமெல்லாம் நொந்து
பெற்ற எம் தாயே எங்களை விட்டு
எங்கு சென்றீர்கள்
தந்தையின் பிரிவுதனை தாங்காத எம்
மனதின் ஈரம் காயுமுன்னே நீங்களும்
எமை விட்டு எங்கு சென்றீர்கள்
அப்பா தன்னுடன் தனக்கு துனையாக
உங்களை அழைத்தாரோ எங்களை
விட்டு விட்டு எங்கு சென்று மறைந்தீர்கள்
பேரர்கள் பேத்தி பரிதவிக்க, அம்மம்மா, அம்மம்மா
என்று கலங்கி நிற்க எமை விட்டு
எங்கு சென்றீர்கள்
உங்கள் சிரித்தமுகம் எங்கே காண்போம்
உங்கள் இனிய குரல் எங்கே கேட்போம்
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி அனுப்பியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
Canada Kanthaswamy Temple
733 Birchmount Rd,
Scarborough, ON
M1K 1R5,
Canada
சில மாதங்கள் தங்களின் அன்பினையும், அரவணைப்பினையும் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் எமக்கு கிடைத்தது. நாட்டின் மோசமான நிலைமை, காலச்சக்கரத்தின் சுழற்சி உங்களை உலகத்தின் எல்லைவரை அழைத்துச் சென்றது....