யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வள்ளிநாயகி திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பட்டினத்தார் பாடலிது
எங்கள் குடும்ப விளக்கே அம்மா
நீங்கள் எமைவிட்டுச் சென்று ஓராண்டு ஆகியதோ
தேடிப் பார்க்கிறோம் உங்கள் அழகு வதனத்தை
நீஙகள் இல்லையென எற்க மறுக்கிறது எம் மனம்
காலனவன் கைபிடியில் சென்ற மாயமென்ன
காலச்சக்கரத்தில் உங்கள் பிரிவும் நிஜமானதே
அம்மா! உங்களை எப்பிறப்பில் இனி காண்போம்
மீண்டும் பிறப்புண்டேல் நீயே எம் தாயாக வேண்டும்
அம்மம்மா! அம்மம்மா!! என்று உங்களை காலடியைச்
சுற்றிவரும் பேரப்பிள்ளைகள் ஏங்கி தவிக்கிறார்கள்
எங்களை விட்டுச்சென்று ஓராண்டும் ஒடி மறைந்ததுவோ!
வற்றியது கண்ணீரி மட்டுமல்ல எமது இதயத்துடிப்பும் அம்மா
கனவில் நீங்கள் வரும்போது நிஜம் என்று கண்விழிக்கையிலே
கனவாகிப் போனதுவோ! நிழலாய் நீங்கள் இருந்து
எங்களை வழிகாட்டுமமோ என்றும்போல்
அன்னையே நீ அருகில் இல்லாத தனிமை
வெறுமையாய் கிடக்கிறது- உலகில்
எங்கு தேடினாலும் ஏது அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
கதிர் வேலாயுதன் பாதம் தொழுகின்றோம்
சில மாதங்கள் தங்களின் அன்பினையும், அரவணைப்பினையும் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் எமக்கு கிடைத்தது. நாட்டின் மோசமான நிலைமை, காலச்சக்கரத்தின் சுழற்சி உங்களை உலகத்தின் எல்லைவரை அழைத்துச் சென்றது....