
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Isleworth ஐ வதிவிடமாகவும் கொண்ட வளர்மதி பரமநாதன் அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லப்பா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
றஜினிபவானி, ஸ்ரீராஜன், காலஞ்சென்ற ராகினி, சாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்லத்துரை, இராசதிரவியம், பரமேஸ்வரி, தேவராசா, சிவலோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி, கந்தசாமி, கதிரேசபிள்ளை, தவமலர், ஆறுமுகம்(மாஸ்டர்), பரமேஸ்வரி, மனோன்மணி, அன்னலட்சுமி, திருப்பதி, ஜெகநாதன், சேதுபதி, நல்லநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கணேசலிங்கம்(கராட்டி மாஸ்டர்), அனுஷா, சிவகாந்தன், தேவராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அச்சுதன், அகிலா, அருள்ராஜ், அகல்யா, பிரியா, பார்த்தீபன், சஞ்சீவன், பிரியந்தன், தர்மினி, தனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஹானா, ஓவியா, நீலன், ஆரியா, அஹிம்ஷா, யுவேதன், ரிவிஷா, அஞ்சலி, நிவேதா, கிசான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்காலச் சூழ்நிலை காரணமாகக் குடும்ப உறவுகள் மட்டும் பார்வைக்கும், இறுதிக்கிரியைகளுக்கும் அனுமதிக்கப்படுவதால் தங்கள் அனுதாபங்களை தெரிவிக்க பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
எங்கள் அன்பின் குஞ்சம்மா. எங்கள் எல்லோருக்கும் நிறைய பிடித்த அம்மம்மா. உங்கள் அன்பினாலும் அரவணைபினாலும் எமக்கு கிடைத்த ஒன்று கூடல்களும் உறவு பாசங்களும் நிறையவே. வயது வந்த பின்பும் எப்படி...