
யாழ். சுழிபுரம் குருபூசை மடாலயத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி அம்பாள்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வயித்தீஸ்வரன் சிவஜோதி அவர்கள் 30-12-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், வயித்தீஸ்வரன் ஹேமசபேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், மகாலிங்கம் கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஹம்சகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவப்பிரகாஷ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
அங்கயற்கன்னி அவர்களின் அன்பு மைத்துனரும்,
கலைச்செல்வம், சசிக்குமார், மலர்விழி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தவச்செல்வி, மாலதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சந்திரபாலன் அவர்களின் அன்புச் சகலனும்,
சிவகுமாரன், சிவகணேசசுந்தரம், சிவராமன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
உஷாதேவி, அமிர்தவேனி, கோமளாம்பிகை ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
சுப்ரசன்னா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் சுழிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலைஇந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
லிற்றில் எய்ட் இன் ஒரு தூணாக இருந்து சமூக முன்னேற்றத்திற்காகப் போராடி வந்த சிவஜோதியின் இழப்பு எமது அமைப்பிற்கும் எமது சமூகத்திற்கும் பெரும் இழப்பு! அவருடைய சமூக போராட்டத்தையும் சமூகப் பணிகளையும்...