யாழ். கைதடி நவபுரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rapallo, Genova வை வதிவிடமாகவும் கொண்ட வைரவன் சண்முகநாதன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மிகவும் இக்கட்டான காலத்திலும் அவரது இறுதி நிகழ்வுகளில் நேரடியாக பங்கேற்க முடியாதவர்களின் நலன்கருதி இறுதி நிகழ்வுகளை நேரலையாக எடுத்துவருவதற்கு உதவிய லங்காசிறி இணையத்திற்கும் , இத்தாலியில் நடைபெற்ற அதேவேளை இலங்கையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களுக்கும் கலந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.