3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து வசந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் கடந்தாலும் விழிகளில் என்றும்
உங்கள் உருவம் தான்
அன்பென்ற சொல்லின் அர்த்தமும் மறந்துவிட்டது
உங்கள் மறைவுடனே
உண்ணும் உணவும் சுவை இழந்துவிட்டது போல்
உணர்கின்றோம் உங்கள் கைகள் படாததனால்
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை
உறவுகளின்
அன்பையும் எமக்கு தந்தவர் நீங்கள்!
உங்கள் பிரிவை ஆற்றவும் முடியவில்லை
ஆறவும் முடியவில்லை
கண்ணோடு இமையானீர் அன்று
எம் கண்ணீரின் கதையானீர் இன்று
விழிபோல் காக்குந்தெய்வமாய் இருந்தீர்கள் அன்று
நீர் சிந்தும் விழியானோம் நாம் இன்று
பூவுலகில் சொர்க்கத்தை எமக்குத் தந்தீர் அன்று
விண்ணுலகில் சொர்ப்பணமாய் ஏன் சென்றீர் இன்று
தகவல்:
குடும்பத்தினர்