2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து வசந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?
என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்!!
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூடசில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
இனி நாங்கள் எங்கே எப்போது
உங்கள் திருமுகத்தைக் காண்போம் அப்பா.. நீங்கள்
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்