யாழ். சங்கானை காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு திருநாவுக்கரசு அவர்களின் நன்றி நவிலல்.
தந்தையே
உதிர்ந்தது உங்கள் உயிர் மட்டுமல்ல
எங்கள் இதயங்களுமே
விடியாத நாட்களாய்
வெளிவானம்
பார்க்கிறோம்
கடிவாளம் இல்லாமல்
இன்று கதியற்று
நிற்கிறோம்
மாதம் தான் ஒன்று இன்று
வலியுடன்
கடந்ததே
நாடிநின்ற ஓர் உறவில் எங்கள் தந்தையரும் ஆனதே
விடைபெற்று நீர் சென்றீர்
இன்றும்
வினா கொண்டு நாம் இங்கே
தடையேதும் இல்லாமல்
இறைவா
மீண்டும் எம் தந்தை முகம் காண
வழியேதும் உண்டோ?
என்று ஏங்குகின்றோம்
பாவிகளாய் நாமிங்கு.....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.