1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சங்கானை காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வடிவேலு திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 14-02-2022
பாசத்தின் ஊற்றே
பண்பின் நாயகனே
அன்பால் அனைவரையும்
அரவணைத்த பண்பாளனே!
எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.
ஓராண்டு கடந்தாலும்
உங்கள் நினைவுகள்
எம் வாழ்வில் என்றும்
பாசமாய் பதிந்திருக்கும்!
வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய நாளும்
வணங்குகின்றோம் இறைவனை!
தகவல்:
குடும்பத்தினர்