1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தும்பளை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வடிவேலு பாலகிருஷ்ணர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் அன்பு அப்பாவே!
நொடிப் பொழுதில் எமை
நோகவிட்டு சென்று விட்டீர்கள்!
மனவொளிகளில் உம் முகம்
இந் நினைவொளியில் தோன்றுதே
காலங்கள் கடந்தும் - உம்
நினைவுகள் கண்ணுக்குள்ளே
ஊடுறுகிறதே
நீ கதைத்த கதைகள்
நீ களிப்பூட்டிய காரியங்கள்
நீ களைந்த கவலைகள்
நீ காட்டிய பாதைகள்
காலங்கள் கடந்தாலும் காவலனே
எம் கண்கள் மூடும்வரை
கண்ணுக்குள் நிற்குமையா
எத்தனை ஆண்டுகள் மாறினாலும்
உம் நினைவு எம்முள்
அகலாது ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்