Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 18 JUL 1958
மறைவு 25 APR 2024
திரு வடிவேல் வரதன்
Vella Kredit & VG Finance Swiss - உரிமையாளர்
வயது 65
திரு வடிவேல் வரதன் 1958 - 2024 கொற்றாவத்தை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் வரதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். 

நாட்கள்  31 கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!

நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றீர்

தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்

எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவர் இன்று எம்மோடு இல்லை

ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?

காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி கிரிகையும் 25-05-2024 சனிக்கிழமை அன்று பி.ப 11.30 மணிக்கு Evang.+ref. Kirchgameinde Souzach-Thurtal Stationsstrasse 34, 8472 Seuzach எனும் முகவரியில் நடைபெறும், அதனைத் தொடர்ந்து அவர்களின் அந்தியேட்டி கிரிகை நாளில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வரவேற்கின்றோம். 

Dear family and friends,
 On May 25, 2024, we would like to come together to remember our Varathan Vadivel. On this day, 31 days will have passed since his death and we would like to use this day to gather together, mourn, remember and eat together.

place & time:
Parish of Seuzach-Thurtal Stationsstrasse 35 8472 Seuzach from 11:00 am.
We would be happy if you could join us to spend this day with us and think of Varathan together.
Varathan family 

இங்ஙனம், மனைவி -கௌரி வரதன், மகன் -கௌதம் வரதன் மற்றும் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

கெளரி, கௌதம் - மனைவி, மகன்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்