அமரர் உதயகுமாரி பரமலிங்கம்
(வதனி, நிலா)
முன்னாள் மாணவி- யாழ் வேம்படி மகளிர் கல்லூரி, BSc, பன்முகப் படைப்பாளி....
வயது 57
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
🌻எம் உயிர் தோழி🌻
நெஞ்சம் கனக்கிறது
நிலாவை நினைக்கையில்!
கண்கள் குளமாகிறது
கண்மணியை காணாமல்!
தொண்டை வரள்கிறது
உன் குரலை கேட்காமல்!
சரித்திர நாயகி நீயம்மா
சாதனையாளியும் நீயம்மா!
சிங்கப்பெண்ணும் நீயே
செந்தமிழ் புலவரும் நீயே!
எம்மீது நீ கொண்ட பாசம்
எல்லையற்ற கடல் அளவு!
உன்மீது நாம் வைத்த அன்பு
வற்றாத நதியைப் போல!
எம்மை ஆட்கொண்டாய்
உன் நகைச்சுவை பேச்சால்!
வேம்படியின் குழுவுக்கு
வரமுடியாமல் நீண்ட நாட்கள்
ஆதங்கப்பட்டாய்……
எழுத முடியாத நிலைமையில்
நீ இருந்த போது…..
லண்டன் வரும்போது உன்னை
சந்திக்க ஆசைப்பட்டேன்
எல்லாம் பொய்யாகி விட்டது
பொன்மகளே நீ போய்வா!!!
எம் கண்மணியே நீ போய்வா!!!
உன் வலிகள் முடிந்தன…
வேதனைகள் தொலைந்தன…
சோகங்கள் முடிந்தன…..
சோதனைகள் தொலைந்தன…..
உறக்கம் கொள் மகளே…
உறக்கம் கொள்…………….
ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏
Write Tribute
Tribute to Uthayakumary Paramalingam. 🌹U - for Uthayakumary "Nila", the Beautiful Princess who was bright as the sunshine in the morning and cool as the moon by night. 🌹T - for her Tenacious...