இருப திருபத்தொன்றில் புலர்ந்தது பதின்மநட்பு - மீண்டும் புலர்ந்தது பதின்மநட்பு புலனக் குழுமமதாய்! பக்குவமாய்ப் பூட்டி வைத்த பரகசியப் புதையல் எல்லாம் பழங்கதைகள் தேடித் தேடி பறந்தது பாழும் மனம் பாரினிலே பல திக்காய்ப் பலவாறாய்ப் பிரிந்த நண்பர் (கல்வி வேலை குடும்பமென) பலவருடம் ஆனபின்பும் பசப்புகிறோம் பலசேதி… பலமைல்கள் தொலைவுகூட பகிர்வதற்குத் தடையில்லை பாலராகச் சேர்ந்த நண்பர் பார்த்திருக்கப் பருவமாகி பரிகாசக் குறைச்சலின்றி பம்பலாய்த் திரிந்த கதை - உயர் பரீட்சையுடன் பிரிந்த கதை பசுமையாய் நிற்கும் கதை! பாடாய்ப் படுத்தும் பையன் பவ்வியமாய்ப் படிக்கும் மகள்’ பரபரத்து ஓடி ஓடி பாங்காக வளர்த்(து) தவரை பட்டம்பெற வைத்த கதை – மேலும் பாட்டியாகி விட்ட கதை! பசப்புகிறோம் பலசேதி… இவ்வகையாய் மகளிர்நாம் வேம்படி சிறுமிகளாய் நாற்பதாண்டு இழப்புகளை நாளேட்டில் தினம்தினமாய் கவர்ந்துவிடத் துடிக்கையிலே ‘நிலாவென’ ஒளிதந்தாள்! நிர்மலமாய் ஒருமங்கை இன்றைய நிலவ(வு)வளின் நிழற்படம் மயக்கிற்று யாரிவளோ? என்று பழையபடம் பகிர்ந்தபோது தானுணர்ந்தேன் குமாரிநீ ‘உதய குமாரி’யென ஆனந்தத்திற் (அ)களவில்லை! உதயகுமாரி ‘நிலா’வாக எழுதுகோலாய் ஆன(உ)வுன் கதைகள் பலபகர்ந்தாய்! பாரினிலே நீபடைத்த கவிகள் பலபகிர்ந்தாய் களிப்படைந்தோம் யாம்! காலநேரம் கூடிவர ஐக்கிய(இ)ராச்சிய ஒன்றியத்தின் சான்றோர் கௌரவிப்பில் - உன் பல்முகம் கண்டறிந்தேன் “உரைசால் மங்கை" “மனோ வீராங்கனை" “நிலாமங்கை” எனப் பல்முகம் கண்டறிந்தேன் அளவில்லா மகிழ்வுற்றேன் ஆண்டவன் கருணைக்கு ஆரா தனையும்செய்தேன்! உன்பிறந்த நாளதனில் " பாரினிலே எழுதுகோலால் தன்தடத்தை பதித்துநம்மைப் பரவசத்தில் மிதக்கவைப்பாள் நம் நிலா! உதயகுமாரி எனும் நிலா எழுத்துருவில் உன்உணர்வு பயனுள்ள தாகவேண்டும் பலமாயும் வளமாயும் பலர்வாழ உன்சிந்தை பயனுள்ள தாகவேண்டும்” - என உனைவேண்டி நின்றேன் உனையழைத்து நீண்டநேரம் உரையாட விளைந்திருந்தேன் உன்போன்ற மாணவர்க்கும் திடமான நெஞ்சுரம் தரும்உன் வார்த்தைகளை பகிர்ந்து முன்(உ)னுதாரணமாய் உனைப்பிரதி பலிப்பதற்கே! கால(உ)னுனை அணுகுவதை அறியாது காத்திருந்தேன் காற்றிலே கரைந்தனையோ! கவிமகளே ‘நிலா’ காற்றிலே கரைந்தனையோ! வித்தியா
Tribute to Uthayakumary Paramalingam. 🌹U - for Uthayakumary "Nila", the Beautiful Princess who was bright as the sunshine in the morning and cool as the moon by night. 🌹T - for her Tenacious...