Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 11 NOV 1969
இறைவன் அடியில் 19 NOV 2020
அமரர் உதயகுமார் நித்தியகல்யாணி
வயது 51
அமரர் உதயகுமார் நித்தியகல்யாணி 1969 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த உதயகுமார் நித்தியகல்யாணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

உன்னை இழந்து ஆண்டு ஐந்து ஆனாலும்
உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகை
மறையவில்லை அம்மா.....!

நேற்று போல் இருக்கிறது
உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் என்னை மறந்தாய் அம்மா!

நாங்கள் உன்னை பிரியவில்லை - ஆனால்
நீ எங்கள் அருகில் இல்லை
உன்னை யாசிக்கிறோம் - அதைவிட
உன்னை நேசிக்கிறோம் அம்மா...

எம் மூச்சு காற்றோடு மட்டும் தான் உன் உரசல்கள்
நீ காற்றோடு தானே கலந்துவிட்டாய்..
"எங்கள் உயிரில் கலந்ததுபோல்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்