தமிழ் ஈழம் யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hildesheim ஐ வதிவிடமாகவும் கொண்ட உமாதேவி கருணைநாதன் அவர்களின் 16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்.
கணவர் :
என் வாழ்வின் வேராய்,
விரிந்து நின்ற ஆலமரமே!
உன் நிழலில் வளர்ந்த
இந்தக் குடும்பம், இன்று
என் வாழ்வின் வேராய்,
விரிந்து நின்ற ஆலமரமே!
உன் நிழலில் வளர்ந்த
இந்தக் குடும்பம், இன்று
நிழலின்றித் தவிக்கிறது.
தாங்கி நின்ற கிளைகள் சாய்ந்தன,
தாங்கி நின்ற கிளைகள் சாய்ந்தன,
அன்பு சொரிந்த இலைகள் உதிர்ந்தன.
தாயாய், தோழியாய், துணையாய்
எனைச் சுமந்த உன் இதயம்
இன்று அசைவற்றுப்
போனதேனோ?
காலத்தின் காற்றினில் நீ கரைய,
கண்ணீர்க் கடலில் நான்
மூழ்கினேன்.
உன் நினைவுகள் மட்டும்
தாயாய், தோழியாய், துணையாய்
எனைச் சுமந்த உன் இதயம்
இன்று அசைவற்றுப்
போனதேனோ?
காலத்தின் காற்றினில் நீ கரைய,
கண்ணீர்க் கடலில் நான்
மூழ்கினேன்.
உன் நினைவுகள் மட்டும்
உயிரோடு என்னுள் வாழ,
உடைந்து நிற்கிறது இந்த மனம்.
மண்ணை விட்டு மறைந்தாலும்,
என் மனதை விட்டு மறையாத
என் பிரியமானவளே!
உன் ஆத்மா சாந்தியடையட்டும்.
அஞ்சலியுடன்...
உடைந்து நிற்கிறது இந்த மனம்.
மண்ணை விட்டு மறைந்தாலும்,
என் மனதை விட்டு மறையாத
என் பிரியமானவளே!
உன் ஆத்மா சாந்தியடையட்டும்.
அஞ்சலியுடன்...
*******************************************
பிள்ளைகள்:
அம்மா எனும் ஆலமரம்
இனி வெறும் நினைவல்லவா?
நிழல் தந்து காத்திட்ட தாயவள்
நீங்கா துயரம் தந்த செல்லவள்.
வேர் முதல் கிளை வரை
அன்பை மட்டுமே விதைத்தவள்!
பாசம் எனும் பழங்களை
பரக்கப் பரக்க பரிமாறியவள்!
மழை, வெயில் பாராது
எம்மைக் காத்திட்ட தெய்வமே!
இன்று உன் பிரிவால்
வாடுகிறோம்
மரமாய் நின்று எமைக் காத்தவளே
மண்ணோடு மறைந்து விட்டாயோ?
உன் நினைவுகள் மட்டும்
உயிரோடு வாழுமம்மா!
அன்னாரின் 16ம் நாள் அந்திரெட்டி நிகழ்வு 15-11-2025 சனிக்கிழமை அன்று நடைபெறும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We’re deeply saddened by the passing of your wife. Our deepest condolences to you and your family.