தமிழ் ஈழம் யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hildesheim ஐ வதிவிடமாகவும் கொண்ட உமாதேவி கருணைநாதன் அவர்கள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், கனகறட்ணம் கருணைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன், ஜெயகாந்திகரன், ஜெயந்திகரன்(மாவீரர்), பிரசாந்தி, சனாதனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுரேகா, நென்சி, ஜீவகாருணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஈழவன், நிலவன், வாகை, பிரியன், துவாரகா, ஜெய், ஆதி, எலையா, லியானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னை உமா தேவி
இவர் 1949 ஆம் ஆண்டு யாழ் பண்டத்தரிப்பில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து கல்வியைக் கற்று முடித்தார். பின்னர் 1971 ஆண்டு யாழ் வல்வட்டியைச் சேர்ந்த கருணை நாதனுடன் திருமண பந்தத்தில் இணைந்து ஐந்து பிள்ளைகளுக்குத் தாயானார். 90 காலப்பகுதியில் ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தபோது விடுதலைப் போராட்டத்திற்கு புலம்பெயர் தேசத்தில் குடும்பத்துடன் இணைந்து தன்னாலான பங்களிப்பைச் செய்து வந்தார். தான் வாழும் பகுதியில் எதிர்காலத் தமிழ் பிள்ளைகள் தமிழ் மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழாலயத்தை ஆரம்பித்து ஆரம்பகால ஆசிரியராகவும் பணியாற்றினார். விடுதலைப் போராட்டம் உச்சம் பெற்ற காலப்பகுதியில் இவரது மூன்றாவது மகன்ஜெயந்தன் ( கேணல் வெற்றிச்செல்வன்) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஒரு விடுதலைப் புலியாக இணைத்து , அவர் இறுதி யுத்த களத்தில் தேசியத் தலைவருடன் தோள் நின்று போரிட்டு வீரமரணம் அடைந்தார். வாய்ப்பேச்சில் இல்லாமல் செயல்வீரனான ஒரு மாவீரனைப் பெற்றெடுத்த தாயைக் கௌரவித்து அன்னையென இவரை மதிப்பளிக்கின்றோம்.
ஜெர்மன்வாழ் தமிழ் மக்கள்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We’re deeply saddened by the passing of your wife. Our deepest condolences to you and your family.