யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உமாதேவி சிவசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13/09/2023
அன்பும் ஆதரவும் கொண்ட
எங்கள் அன்புச் சகோதரியே உமாதேவி!
ஓராண்டுகள் ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் இன்றும்
ஓளிவிளக்காகத் தான்
பிரகாசித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்
எங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு
கணப்பொழுதிலும்– நீங்கள்
எங்கள் மீது காட்டிய அன்பு,
பாசம், பரிவு அனைத்தையும்
பசுமையாக இன்றும் உணர்கின்றோம்
அன்புச் சகோதரியே...
உறவோடு ஊராரும் உனதருமை உதிரங்களும்
ஓராண்டு போனாலும் உன்னன்பால்
பசுமரத்தாணி போல பதிந்துவிட்டாய் எம்மனதில்
கடந்து வந்த பாதைகளில் நினைவலைகள் தொடரட்டும்
மறுக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல்
மனதோடு போராடும் மறையாத ஞாபகங்கள்
அடிமனதில் அழியாத நினைவுகளாய்
பாசமுள்ள சகோதரியே
எம்மை
பரிதவிக்க விட்டு
பறந்து நீ சென்றதும் ஏனோ?
கலங்கி துடித்தாலும் கண் காணாமல்
நாம்
அழுதாலும் உன் ஆன்மா
ஆண்டவன்
காலடியில் சாந்தியடைய
அனுதினமும்
நாம் இறைவனை பிராத்திக்கிறோம் !