2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் துரைசிங்கம் தங்கச்சிப்பிள்ளை
1944 -
2019
பலாலி, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பலாலி றோட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் தங்கச்சிப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு காலம் இமைப்பொழுதில் போனதம்மா
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லை அம்மா இவ்வுலகில்!
அம்மா எங்கள் உயிருடன்
கலந்திட்ட உங்கள் உதிரம் எம் உடலில்
உள்ளவரை நீங்கள் எம் ஒவ்வொருவரின்
உயிருக்குள் உயிராக வாழ்வீர்கள்
எம்முடன் நாம் இவ்வுலகில் உள்ளவரை!
மறுபிறவி என இருந்தால் மீண்டும் நாம்
உங்கள் கருவறையில் புதிதாக உருவெடுத்து
உங்கள் மடியில் நாம் தவழ வேண்டும் அம்மா!
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்