Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 23 MAR 1938
மறைவு 15 FEB 2024
அமரர் பொன்னையா துரைசிங்கம்
CTB
வயது 85
அமரர் பொன்னையா துரைசிங்கம் 1938 - 2024 யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி வடக்கு ஐயாகடையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா துரைசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்போடு எங்களை எல்லாம் அரவணைத்து
பாசத்தின் உயிராய் எம்முடன் வாழ்ந்து
எல்லோரையும் அழ விட்டு மறைந்த
எம் தெய்வமே! அப்பாவே!

ஓவ்வொரு விடிப்பொழுதும் நீங்கள்
எங்கே என்று எமது விழிகள் தேடுகிறது
உங்கள் நினைவுகளுடன் நாமெல்லாம்
ஒன்று சேர மனம் துடிக்குது மீண்டும்
ஒரு முறை எம்மை கட்டி அரவணைக்க
நீர் எழுந்து வாராயோ அப்பா!

கனவுகள் பல கண்டோம் எம்
அருகில் நீண்ட காலம் இருப்பீர்கள் என்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும் முன்பே
எம்மை விட்டு ஏன் சென்றீர்கள் அப்பா!!

இப்பொழுதும் உம் பாசத்திற்காக
ஏங்கி  நாட்கள் எல்லாம் கண்ணீரில்
கரைந்தோட கலங்கித் தவிக்கின்றோம் அப்பா!!!

என்றென்றும் உங்கள் நினைவலைகள்
அழியாது எம்முடன் வாழும்

ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

தகவல்: குடும்பத்தினர்