
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி சையோகநாதன் அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபராஜ்(பிரித்தானியா), பிரசீத்தா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகராஜா, சந்திரபாலன்(பிரான்ஸ்), சிவலோகராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகபிரியாள், கஜமுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகராசா, காலஞ்சென்ற கருணாகரன், மகேஸ்வரி(லீலா), தவமலர், வசந்தா, கோமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மு. நாகராசா அவர்களின் சகலனும்,
மகேஸ்வரி அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,
ஜீவிதா, பிரலீத்தா, பாமிதா(பிரான்ஸ்), தனுசன், அனுசா, சாது(கனடா), சஞ்சிவி, காலஞ்சென்ற சிரஞ்சீவி(இத்தாலி), ஜெயந்தா, திவாகர், சயந்தன் ஆகியோரின் பெரிய தந்தையும்,
அஜித் , அஜிதா, விஜிதா ஆகியோரின் அன்பு மாமாவும்,
அணகா, சுவாஸ்திகன், தனிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-04-2020 திங்கட்கிழமை அன்று ஈச்சமோட்டையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிரசா வின் அப்பா நீங்கள் எங்களை எல்லாம் விட்டு பிரிந்து நீண்ட தூரத்துக்கு போய்ட்டிங்கள் நான் செத்தால்...