Clicky

பிறப்பு 27 OCT 1944
இறப்பு 28 MAY 2020
அமரர் துரைச்சாமி இரத்தினேஸ்வரி
வயது 75
அமரர் துரைச்சாமி இரத்தினேஸ்வரி 1944 - 2020 முள்ளானை இளவாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நர்மதா பிறைசூடி 07 JUN 2021 Sri Lanka

என்றும் அதிகாலையில் துயில் எழுப்பும் என் கதிரவன் அன்பினால் அடிமையாக்கும் அட்சரபாத்திரம் ஒப்பனையில் சிங்காரி மங்கையரை விஞ்சி சேலை கட்டும் மாதரசி வெள்ளிக்கிழமையென்றால் துள்ளிப்போய் அள்ளி வருவீர் ஆண்டவன் அருட்கடாட்சத்தை எமக்காகயாரம்மா இனி வாங்குவார் வீட்டிற்குவரும் நட்புகள் யாவும் எனை மிஞ்சி உம்முடனே உறவாடும் மருமகனை மகனாகப்பார்த்திருந்த பாசக்காரி வீரமகன்களை ஈன்ற வீரத்தாய் அம்மா - நீ பேரப்பிள்ளைகளுக்கு பக்குவமாய் ஆங்கிலத்தை வளர்த்த ஆசான்-நீ கணிதத்தை கடைசிவரை மறவாத மேதை-நீ வைத்தியசாலை என்னால் பைத்தியமாய் வைத்தியரை நாடிச்சென்றது நான் இல்லாக்காலத்தில் நீ என்ன செய்வாய் என்றோ! புரிகிறதம்மா உன் ஏக்கம் கருவிலே உயிர்தந்து பெற்று பாலூட்டிய உனக்கு கடைசி நாளில் நான் பால் ஊட்டி - நீ கண்மூடிய நினைவில் நான்...