5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் துரைசாமி பரமேஸ்வரன்
(கண்ணன்)
வயது 47
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வடமராட்சிக் கிழக்கு பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைசாமி பரமேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு ஐந்து போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை அப்பா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
ஓங்கி ஒலிக்கிறது உம் குரல் எம் காதுகளில்
விழுகின்றதே நெஞ்சம் வாட்டுகிறதே
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.!
தகவல்:
நண்பர் சண்முகதாசன் குடும்பத்தினர் மற்றும் ராகினி(மனைவி) குடும்பத்தினர்.
Far too young to pass away. Heartfelt condolences to his wife. May his soul rest in peace.