Clicky

31ம் நாள் நினைவஞ்சலி
பிறப்பு 26 OCT 1971
இறப்பு 05 MAR 2019
அமரர் துரைசாமி பரமேஸ்வரன் (கண்ணன்)
வயது 47
அமரர் துரைசாமி பரமேஸ்வரன் 1971 - 2019 குடத்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சிக் கிழக்கு பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைசாமி பரமேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

மணநாள் தொட்டு மனைவாழ்வு
அழகாகும் வரை தினம் பூத்தாய்
என்னில் பொய்கையாய்
தினம் தினம் ஏங்க எனை ஏன்
விட்டு சென்றாய் தனிமையாய்

தேடும் போதெல்லாம் அருகிருந்து
வாடும் போதெல்லாம் கருணை மழை பொழிந்து
ஓடும் நதியாய் பாடி மகிழ்ந்த தமிழே!
இன்று தனிமையில் நினைவுகள் கொல்ல
வெறுமையில் உயிர் கரைந்து
ஞாபகத்தை மெல்ல
உன் உலகை தேடுகிறேன் தலைவா
என் உலகை அழகாக்கிய நீதானே
என் இறைவா...!!

ஞாபக பொழுதெல்லாம் உங்களின் தரிசனம்
எல்லோர் அகங்களிலும்
வாழ்கின்றீர் இது தானே நிதர்சனம்
எங்கள் மனங்களில் அமர்ந்தீர் அழகிய அரியாசனம்

மனை சூழ்ந்த உறவுகளின்
பேச்சுக்களில் வலம் வரும் உங்கள் மனம்
ஏனோ எனக்கு மட்டும் ஓயவில்லை
நாளும் அழுகை தினம் தினம்!!

வரமாக கிடைத்த வாழ்வின் துணையே!
வளமான வாழ்வு தந்த மனையின் இறையே!
சுகமாக வலம் வந்த சுந்தர இசையே!
அகம் அழ முகம் சிரித்து வாழ்வது என் விதியே!

இறை தேடி சென்றவரே ஈசனடி மலர்பவரே!
குறையொன்றும் வைக்காது வாழ்வில்
கொடியேற்றி போனவரே!
விழி இரண்டும் உமை தேட
மொழியின்றி மௌனத்தில் உனை பாட
வழி எங்கும் பார்க்கிறேன் உன்னை
இருளிலும் ஒளியாக தோன்றி பார்க்கின்றாய்
என்னை இறைவனின் அருள் பெற்று
மீண்டும் பூப்பாயாக எம் மனதை காப்பாயாக!!
 ஆயுளின் நினைவுகளுடன் உங்கள் துணைவியார்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

எதிர்வரும் 06-04-2019 சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கும் அந்தியேட்டி கிரியையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: மனைவி

Summary

Photos

No Photos

Notices