

யாழ். துன்னாலை தெற்கு கிளானைப் பிறப்பிடமாகவும், தற்போது லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைச்சாமி பாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 03-02-2022
அன்பு வழிகாட்டி அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே!
ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை நம்துயரம்
மீண்டும் எப்போ காண்போம் உன் புன்னகை நிறைந்த திருமுகத்தை
கணப்பொழுதும் எண்ணவில்லை அப்பா
காலன் உன்னை அழைப்பான் என்று
அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய்
பாசம் கொண்டு அனைவரையும் பக்குவமாய் பார்த்தீரே!
தகப்பனாய் தாரமாய் தர்மத்தை போதிக்கும் குருவாய்
நீதி மாறாத தெய்வமாய் வாழ்ந்து
உன் நிலையான வாழ்வு வேண்டி நீத்தாயோ- இவ்வுலக வாழ்க்கை தனை
நீங்கள் பூவுலகை விட்டு மறைந்த போதிலும்
உங்கள் ஆத்ம வழி காட்டலிலும்
உங்கள் நினைவுகளுடனும் எங்கள்
வாழ்க்கை பயணம் தொடரும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details