யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா இரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கண்ணிமைக்கும் பொழுதினிலே- காலனவன்
காற்றாய் கொண்டு சென்றதென்ன
முப்பத்தொரு நாள் ஆனபோதும்
ஆறுமோ எம் துயரம்...
அம்மா... அம்மா... அம்மா...
என்ற சொல்லுக்கே ராணியம்மா நீ
ஒரு மாதம் கடந்தாலும் நீ பெற்ற நான்கு முத்துகளும்
கண்ணீரில் கரைகின்றோம் காலங்கள் கடந்தாலும்
கரையாது உன் நினைவுகள் அன்புத் தாயே!
முப்பத்தொரு நாள் ஆனாலும்
துவண்டு நிற்கின்றோம் உம் விழிதேடி!
எம் உயிருடன் ஒன்றாய்
கலந்து விட்ட எங்கள் தெய்வமே!
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....
எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்களை பிரிந்து 31நாட்கள் ஓடிவிட்டன ஆனால் இன்னும் உங்கள் நினைவலைகள் எங்களைவிட்டு போகவில்லை உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்