யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராசா இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமே
பாசத்தின் பிறப்பிடமே
எங்கள் அம்மாவே!
எங்கு சென்றீர் எம்மை விட்டு!
அன்று நீங்கள் தாயாக இருந்தீர்கள்
இன்றோ தெய்வமாகி விட்டீர்கள்
ஆதலால் கைகள் தொழுகின்றன
எம் கண்கள் அழுகின்றன!
அழுத கண்கள் வரண்டு
ஆண்டொன்று போச்சு
ஆண்டொன்று போனாலும்
அன்பு கொண்ட உள்ளம் தான் மாறிடுமோ
ஆயிரம் உறவுகள் இங்கிருந்தாலும்
அம்மா என்ற உறவு இனி வருமோ?
எத்தனை நாட்கள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால் தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தானே
எங்கள் இதயங்களின் வலியையும்
இழப்பின் வேதனைகளையும்
சொல்ல முடியாது வார்த்தைகளில்
நீங்காத நினைவுடன் ஓராண்டு
ஏக்கம் மட்டும் மிஞ்ச
நீர்த்துளிகள் நிறைகின்றன...
காலங்கள் கரைந்தாலும்
அழியாது உம் நினைவு
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
எங்களை பிரிந்து 31நாட்கள் ஓடிவிட்டன ஆனால் இன்னும் உங்கள் நினைவலைகள் எங்களைவிட்டு போகவில்லை உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்