5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் துரைராசா நந்தகுமார்
(அனுசன்)
வயது 36
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழி விதானையார் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராசா நந்தகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
என்னுடன் பிறந்தவனே என்னருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததடா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன எம் உடன்பிறப்பே
நாம் ஓடியாடி விளையாடி நாட்கள்
கண்முன்னே வந்து செல்கின்றது!
நீ எம்மை விட்டுப் பிரிந்தாய் என்று
நினைக்கையிலே என் மனமோ
உன்னை மறுமுறை பார்க்க ஏங்கித் தவிக்கின்றது!
ஒருமுறை வாரயோ!
உன் குரல் கேட்க வரம் தாராயோ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்