Clicky

அமரர் துரைராஜா உதயகுமார் (உதயன்)
இறப்பு - 23 NOV 2020
அமரர் துரைராஜா உதயகுமார் 2020 நாயன்மார்கட்டு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thurairajah Udhayakumar
2020

சிவா உம்மை நினையாத நேரங்கள் இல்லை. அன்ரியும், நானும் அடிக்கடி உம்மை நினைவு கூர்ந்து பேசிக்கொள்வது ஒரு தனி அனுபவம். சிரித்த முகம், பூப்போன்ற சுபாவம், மற்றவர்களின் துன்பங்களைப்பார்த்து மனமுருகும் பக்குவம் உம்மை எவருடனும் பகைக்க வைக்காது. உமக்கு வாழ்க்கைத்துணையாக அமைந்த உமது மனைவியும், மூன்று குழந்தைகளும் உம்மைப்போன்று பாச சுபாவம் கொண்ட பெருமைக்குரிய உடன் பிறவா சொந்தங்களே எமக்கு. உமது பிரிவானது ஒரு துன்ப நிகழ்வு. தலைவர் ஒவ்வொருமுறையும் உயிர்தப்பிய வேளை அதை தனக்கான கால கெடு என்று ஏற்று இன்னும் கடமை உண்டென்று வாழ்பவர். உமக்கு இறைவன் அந்த வரத்தை தரவில்லை காரணம் நீர் உமது கடமையை கடவுளுக்கும், மானிடருக்கும் நேர்த்தியாக செய்து முடித்துவிட்டீர் என்ற காரணத்தால் உம்மை எடுத்துக்கொண்டார். அவர் கதவை தட்டி கூட்டி சென்றுவிட்டார். உமது ஆத்துமா சாந்தி அடைய நாங்கள் பிரார்த்திக்கும் வேளை, உமது மனைவி, பிள்ளைகளுக்கும் எங்கள் அன்பு கலந்த ஆறுதல்களை இறைவன் தர வேண்டுகிறோம். உடலால் ஒதுங்கி இருந்தாலும், உங்கள் உயிரோடு ஒன்றித்து நெருக்கமாகிவிட்டார் சிவா என்பதுவே உண்மை. என்றும் பாசமுள்ள உடன் பிறவா அன்ரீ, அங்கிள், பிள்ளைகள்.

Write Tribute

Tributes