Clicky

அமரர் துரைராஜா உதயகுமார் (உதயன்)
இறப்பு - 23 NOV 2020
அமரர் துரைராஜா உதயகுமார் 2020 நாயன்மார்கட்டு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thurairajah Udhayakumar
2020

வானுயர மனம் படைத்தோன்! உதயன்..... எந்நிலையிலும் சிரித்த முகம்... இயல்பிலேயே எல்லோரையும் ஈர்க்கும் இயல்பு... கடிந்து கொள்வது என்பதே தெரியாதவன்.... எல்லோரையும் உறவுசொல்லி அழைப்பதில் அவன் நிகர் யாருமில்லை.... ஊர்மக்களுக்கு அவன் அறிமுகம் தேவையில்லை... சிறுவர் முதல் கிழவர் வரை அவனை பிடிக்காதோர் யாருமில்லை.. அவன் கனிந்த பேச்சில் திளைக்கதோர் எவருமில்லை.. ஊர்ப் பணிக்கு என்றும் முன்னின்றவன் காலத்தின் பணிக்கும் தோள் கொடுத்தவன் 90 களில் அவன் கால் பதியாத எம் ஊர் வீதிகள் இல்லை எனலாம். புலத்திலும், ஊர்ப் பணி தொடர்ந்தவன் ஊர் கனவுகளையே சுமந்தவன், காலன் அவற்றையெல்லாம் கலைத்து அவனையும் கவர்ந்தான் இன்று. வாழ்வென்பது யாதெனில் ....... உறவுகளுடன், சுற்றத்துடன் நிறைவுடன் வாழ்வது மட்டுமே! என்பதை ஆழமாக நம்பியவன்.... அவனின்... அந்த சிரிப்பையும், கனிந்த பேச்சையும், இன்று இழந்து நிற்கின்றோம். வானுயர மனம் படைத்தோனை இழந்து நிற்கின்றோம்! சென்றுவா உதயன்.... உன் ஆத்மா சாந்தி பெறட்டும்! உன் குடும்ப துயரில் எம் கண்ணீரும் கலக்கட்டும்! உன் நினைவுகளுடன் நாயன்மார்கட்டு நண்பர்கள்.

Write Tribute

Tributes