யாழ். இளவாலை பொயிற்றியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி "BELL HOME" மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தொம்மைப்பிள்ளை சிங்கராயர் அவர்களின் அஸ்தி நல்லடக்கத் திருப்பலி.
20-07-2023 அன்று லண்டனில் காலமான அன்னாரின் அஸ்தி கொண்டுவரப்பட்டு யாழ்ப்பாணம் அடைக்கலமாதா தேவாலயத்தில் 09-09-2023 சனிக்கிழமை மு.ப 10:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகிறோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our Heartfelt Condolences to Selvam Aunty, Children and Grand Children. Rest in Peace. We have known all of you for a long time in Jaffna and in Colombo.