யாழ். இளவாலை பொயிற்றியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி "BELL HOME" மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தொம்மைப்பிள்ளை சிங்கராயர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் உறைவிடமான
அன்புள்ள அப்பாவே!!
ஒளி சிந்தும் ஆதவனாய்
நல்ல வழி காட்டியதால்
அவ்வழியே வாழ்கின்றோம்
இமைப் பொழுதும் உமை மறவோம்.
நீங்கள் எம்மைப் பிரிந்து மறைந்து
இன்றுடன் ஆண்டு ஒன்று ஓடிவிட்டன.
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எங்களுக்கு பொற்காலமாகும், நற்காலமாகும்.
கடந்த காலம் எக்காலத்திலும் திரும்பிவரப் போவதில்லை
ஆனாலும் நீங்கள் எம்மை வாழவைத்து
மகிழ்வித்த காலத்தில் விட்டுச் சென்ற ஞாபகங்கள்
ஏராளம் ஏராளம்.
ஒவ்வொரு ஞாபகச் சின்னமும்
ஒவ்வொரு கதை சொல்லும்.
அவற்றுள் உங்கள் திருமுகத்தை
தினமும் காண்கின்றோம்.
உங்களை எங்களால் மறக்க முடியாது.
மறக்கவும் மாட்டோம் மறவோம் மறவோம் மறவோமே!
ஆண்டவன் திருவடியில் அமைதியாய்
நீங்கள் வாழ ஆண்டாண்டாய் உங்கள்
நினைவுடனே பிரார்த்திப்போம்..!
Our Heartfelt Condolences to Selvam Aunty, Children and Grand Children. Rest in Peace. We have known all of you for a long time in Jaffna and in Colombo.