1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வராணி தியாகராஜா
வயது 75
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், சிலாபம், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராணி தியாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!
இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!
நிலவை நேசித்தேன்!!
மறையும் வரை....
கனவை நேசித்தேன்!!
காலை வரை...
இரவை நேசித்தேன்!!
விடியும் வரை...
தாயே உன்னை நேசித்தேன்!!
என் உயிர் உள்ளவரை.....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபம்