

-
10 JUN 1964 - 07 MAY 2023 (58 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Chevilly Larue, France
திதி:26-04-2024
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chevilly Larue ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தியாகராஜா கணேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை பிரிந்தே என்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உங்களைத்
துரத்தித் தேடுதே!...
பாதிவழி வாழ்விலே ஏனோ நீர் பரலோகம் புகுந்தாய்
பக்கத்தில் நீங்கள் இருப்பது போல் நினைப்புடனே
பகல் இரவைக் - கடக்குதையா
நேற்றுவரை நீங்கள் எம்முடன் வாழ்ந்து
நிறைவு கண்டதெல்லாம் நேற்றோடு போயிற்று - உங்கள்
நினைவொன்றே என் வாழ்வாச்சு
என் அருமைக் கணவரே..!
என்னை தவிக்கவிட்டு எங்கு சென்றாயோ..!
வானடைந்து ஆண்டு ஒன்று ஆனாலும்
உம் பிரிவுத்துயர் ஆறாது
நீங்கள் என்னைவிட்டு
நீண்டதூரம் சென்றாலும்
உம் ஆசைமுகம்
என் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த
நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறேன்..!
என் வாழ்நாள் முழுவதும்
கூடவே
இருப்பேன் என்று கூறியது
பொய்யாக்கிப் போனதே-
இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
கனவாகிப் போனது
என் இனிய வாழ்க்கை..!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Chevilly Larue, France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
