Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 19 SEP 1943
மறைவு 07 MAY 2022
அமரர் திருநாவுக்கரசு சிவா மகேசன்
ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் (U.K.), முன்னாள் தலைவர்- காரை. அபிவிருத்திச் சபை, நிறுவுனர்- களபூமி கலையகம்
வயது 78
அமரர் திருநாவுக்கரசு சிவா மகேசன் 1943 - 2022 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், காரைநகர் களபூமி விளானையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சிவா மகேசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

எமது குடும்பத்தின் பாசத்தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எங்களைத் தவிக்கவிட்டு அமைதியாய்
விண்ணுலகு சென்றீர்களே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 04:00 மணியளவில் பாலாவோடை அந்தியேட்டி மடத்திலும், வீட்டுக் கிருத்திய கிரியைகள் 06-06-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகை தந்து, அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். 

முகவரி:
விளானை,
களபூமி,
காரைநகர். 


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 16 people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.