Clicky

பிறப்பு 01 DEC 1936
இறப்பு 19 DEC 2020
அமரர் திருநாவுக்கரசு சர்வலோசனி 1936 - 2020 உரும்பிராய் வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஜர்னிதன் & விபிசாந் ரவிச்சந்திரன் 20 DEC 2020 Germany

அப்பம்மா! கடைசியில் விடைபெற்றீர்! எம் நெஞ்சங்களில் அன்பு நினைவுகளை விட்டுவிட்டு! பல்லாயிரத் தொலைவிலிருந்தும் எம்மருகில் இருந்தீர்! ஆனால் இன்றோ, கண்டறியாத் தொலைவில் உள்ளீர்க்ள்! உனக்காக இருப்பேன் என்று மிடுக்குடன் எம்மிடம் வாக்களித்து அவ்வாக்கையே இன்று முறியடித்தீர்களே! உங்களை நேரில் கண்டதே மூன்றே வாரம், ஆனால், உணர்ந்தது அநேகம்! சேர்ந்து சாந்தி அத்தையின் இறுதிச்சடங்கில் சிந்திய கண்ணீருடன் துயர இரங்கலையும் எம்மை தூக்கி நீங்கள் அரவணைக்கும்பொழுது மகிழ்வையும் உணர்ந்தோம்! உணர்வுகளுடன் மறையா நினைவுகள் பிணைந்திருக்க நீங்கள் எம் நெஞ்சத்துடன் பிணைந்தீருப்பீர்! அப்பம்மா! கடைசி முறை டாட்டா காட்டுகிறோம்! கடைசி கடிதமும் எழுதுகிறோம்! உங்களை நாம் என்றும் மறவோம்! சாந்தி, சாந்தி, சாந்தி !!!