Clicky

மலர்வு 24 MAR 1934
உதிர்வு 18 JAN 2025
திருமதி திருஞானச்செல்வம் பத்மாவதி
ஓய்வு பெற்ற நெசவு ஆசிரியை
வயது 90
திருமதி திருஞானச்செல்வம் பத்மாவதி 1934 - 2025 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தர்சி,மாணிக்கவாசகர் தவமணி குடும்பம் 21 JAN 2025 Switzerland

என்னைப் பெற்ற அன்னைக்கு நிகராக என்னைக் கல்வியறிவுள்ளவளாக, மேடைக்கூச்சமின்றி பேசும் திறமையுள்ளவளாக ஆளாக்கிய என் அன்புக்குரிய அம்மாவே! அம்மா நீங்கள் கைவீசி நடக்கும் கம்பீரநடை,கல்விக்கண் கண்ட நல்ல ஆசான்,வறுமையில் வாடுபவரைக் கண்டால் அவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவ வேண்டுமென்ற நல்லுள்ளம் அம்மா உங்கள் இடத்தை நிரப்ப எங்களுக்கு யாருமில்லை. வெந்துயரில் நாம் மூழ்கி வேதனையில் துவழ்கின்றோம்,பிள்ளைகள் நாம் தவித்து நிற்க காணாத்தூரம் சென்றதேனோ? ஆயிரம் பேர் அன்பு சொரிந்தாலும் எம் அன்னைக்கு ஈடாகுமா? என் அம்மாவைப் பிரிந்து நான் உஷாக்காவோடு இருக்கும்போது பெற்ற பிள்ளைக்கு நிகராக அன்பு தந்து அரவணைத்தீர்கள். வானத்து முழு நிலவாய் எம் வாழ்வு வளம் பெற வழிகாட்டியாக இருந்தீர்கள்.உங்களுடைய ஊரே போற்றும் உன்னதமானவராய் உழைத்தீர்கள். நான் அண்மையில் ஊருக்கு வந்தபோது உங்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அம்மா என அழைத்தேன் உங்களால் பேச முடியவில்லை ஆனாலும் என் குரல் விளங்கியதால் என்னவோ உங்களுடைய கண்ணிலிருந்து கண்ணீர் வந்ததம்மா.எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்டதேனம்மா? உங்களை இழந்து அழுது புலம்புகின்றோம்,உங்களுடைய ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி. அன்பு மகள் தர்சி