Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 16 MAR 1938
மறைவு 24 MAR 2023
அமரர் திருச்செல்வம் நாகேஸ்வரி
ஆசிரியர்- புளியங்கூடல் ஆரம்பப் பாடசாலை
வயது 85
அமரர் திருச்செல்வம் நாகேஸ்வரி 1938 - 2023 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருச்செல்வம் நாகேஸ்வரி அவர்கள் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் பல கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
 அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!

அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
 ஒரு முறையாவது வாங்க அம்மா
 உங்கள் முகம் காண..... "

மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும்
 விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ?
 எம்கண்ணிலே வழியும் நீரை
உங்கள் கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 26 Mar, 2023
நன்றி நவிலல் Sun, 23 Apr, 2023