யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருச்செல்வம் நாகேஸ்வரி அவர்கள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:10/04/2024
அம்மா நீங்கள் எம்மைப் பிரிந்து
ஓராண்டு காலமானதுவோ!
அருள் விளக்கே நீங்கள் அணைந்தது
சில நாழிகை போலன்றோ! சிந்தனையில் தோன்றுதம்மா
நீங்கள் எமை விட்டுப் பிரிந்தாலும்- அம்மா
நித்தமும் உங்கள் நினைவு நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில் நீங்கள் சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா
அரும்பசி வந்தபோது அம்மா உங்கள் நினைப்பு
ஆற்றா நோய்க்கும் நீயே தானேயம்மா மருந்து
ஆயிரம் உறவுகள் பூமியில் இருந்தும்- என்ன
அன்னையே உனக்கு ஒப்பாகுமோ ஓர் உறவு
உன்னைத் தொழுதேத்த எம் முன்னே நீங்கள் இல்லையம்மா
உன்னைப் போல் ஓர் தெய்வம் இப்புவியில் இல்லையம்மா
மனக்கண்ணில் நாளும் உனைக்கண்டு துதிப்போமம்மா
மண்ணில் எம் உயிர் வாழும் காலம் வரை!
மனதோடு எமை சுமந்து பிரிவோடு துயர் தந்து
ஆண்டுகள் ஒன்று ஆனாலும்
ஆறாது உந்தன் இழப்பின் துயர் நெஞ்சை விட்டு
நீங்காது உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
Our deepest condolences rest in peace your memories are always in our heart Karunavathy Manikkam