2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திரவியம் ஜோர்ஜ் திரேசா
வயது 78
Tribute
19
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடம் பாடசாலை வீதியை வதிவிடமாகவும், இத்தாலி Palermo, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரவியம் ஜோர்ஜ் திரேசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மண்ணில்
மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில்
இனிமை கொண்ட எங்கள்
வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!
தாயே உங்கள் முகம்
பார்க்காமல்
கலங்கி நின்றோம்
அன்றும்,
இன்றும் உங்கள்
இழப்பின் வலி
நெஞ்சுக்குள் படபடக்குது..
உங்கள் ஆத்மா சாந்தி
அடைய எல்லாம்
வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்