Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 13 MAR 2007
உதிர்வு 25 JUN 2015
அமரர் தீபிகா சண்முகப்பிரபா
வயது 8
அமரர் தீபிகா சண்முகப்பிரபா 2007 - 2015 Toronto, Canada Canada
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தீபிகா சண்முகப்பிரபா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.  

நீ பிறந்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை- இன்று
 காலனுடன் சென்று எங்களை கலங்க வைத்தாயே!

உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
 தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!
 என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை
போன திசை எது என்று தெரியாது?
 எங்கும் நீ நிறைந்தாய்
 எதிலும் நீயே நிறைந்தாய் எங்களில்
கண் - நீர் நிறைத்து
 நிஜத்தில் ஏன் மறைந்தாய்?

உதிர்ந்து நீ போனாலும்
 உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் மகளே!

 என்றும் உன் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
குடும்பத்தினர்.

எமது செல்வப் புதல்வியின் 9வது ஆண்டு ஞாபகார்த்த நடைபயன நிகழ்வு 25.06.2024 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 06:00 மணியளவில் Rouge National Urban Park, 6994 19th Ave, Markham, ON L6B 1A8, Canada எனும் முகவரியில் இருந்து ஆரம்பமாகும்.


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices